நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக தனம் என்பவரை சாமுவேல் தாக்கியதில் தனம் உயிரிழந்தார். இது குறித்து, விசாரணைக்காகச் சென்ற புதுசத்திரம் சார்பு ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் மீது சாமுவேல் ஆசிட் வீசி தாக்கினார். இதில் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு நிதியுதவி: முதலமைச்சர் உத்தரவு! - ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காவலர்கள் நிதியுத வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவலர் இருவரது வீர தீர செயலை பாராட்டி, தலா ஒரு லட்சம் வழங்கப்படும். மேலும், மருத்துவ செலவை அரசே ஏற்கும். இந்த விபத்தில் லேசாக காயமடைந்த பொதுமக்கள் குழந்தைவேல், பிரதீப், வெங்கடாச்சலம், நாகராஜ், பெரியசாமி, மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, மணிவேல், தமிழ்ச்செல்வன், முத்துக்குமார், பெருமாள், ராமகிருஷ்ணன், தனசேகர் ஆகியோருக்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்ப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!