சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களை தடுக்கவும், ரோந்து பணிகளுக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக ரூபாய் 95.58 கோடி மதிப்பீட்டில், ஆயிரத்து 506 இருச்சக்கர வாகனங்கள், 31 ஸ்கார்ப்பியோ வாகனங்கள், 510 பொலீரோ ஜீப்புகள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள், 54 லாரிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 271 வாகனங்களை காவல்துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவின் அடையாளமாக இன்று தலைமைச் செயலகத்தில் 41 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இவ்விழாவில் தலைமை செயலாளர் சண்முகம், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, கே.பி.அன்பழகன், செல்லூர். ராஜூ உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.