சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்பாராத விதமாக பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சுமார் 25 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
25 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவு - ஒரு லட்சம் வழங்க உத்தரவு
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
cm-expressed-his-condolences-to-families-of-25-victims-and-ordered-them-to-provide-rs-1-lakh
தூத்துகுடி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரில் மூழ்கியும், சாலை விபத்திலும் சிக்கி உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.