தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டு வீரர் உயிர் நீத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது- முதலமைச்சர் பழனிசாமி - இந்தியா-சீனா மோதல்

சென்னை: லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தோடு ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டு வீரர் உயிர் நீத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி
முதலமைச்சர் பழனிசாமி

By

Published : Jun 16, 2020, 4:30 PM IST

Updated : Jun 16, 2020, 6:17 PM IST

இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் சீனா தனது ராணுவத்தை கடந்த மாதம் குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து எல்லையில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், லடாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேற்றிரவு (ஜூன் 15) இரு தரப்பு ராணுவத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். மேலும், அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு பழனி 22 ஆண்டுகளாக சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்த ராணுவ வீரர் பழனிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றினை பதிவு செய்தார். அதில், ”லடாக் எல்லைப்பகுதியில் சீன் ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம்-கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் போலவே, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ட்வீட் ஒன்றினை பதிவுசெய்துள்ளார். அதில், “லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினரை சீன இராணுவம் தாக்கியதில், தம் இன்னுயிர் ஈந்த இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வீரமரணம் எய்திய சகோதரர் திரு.பழனி அவர்களின் மறைவால் மீளாத் துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம்

Last Updated : Jun 16, 2020, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details