தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!! - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்

சென்னை: பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்றதால் துண்டை எடுத்து கட்டிக்கோங்க கரோனா நோய்க்கு மருந்து கிடையாது என தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிவுரை வழங்கியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

CM EPS speech
CM EPS speech

By

Published : May 26, 2020, 11:12 PM IST

கரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் வைரல் ஆகிவருகிறது.

அதில் முதலமைச்சர் தனது வாகனத்தில் பயணிக்கும் பொது முகக் கவசம் அணியாமல் பொதுமக்களில் சிலர் வெளியில் வருவதை பார்த்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கரோனா நோய்க்கு மருந்து கிடையாது அதனால் கைத்துண்டை எடுத்து கட்டிக்கோங்க என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தேர்வு விடைத்தாள் திருத்தும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details