தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா - முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

cm edappadi palanisamy

By

Published : Nov 4, 2019, 1:46 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா ரூ.396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அண்மையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அவர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தலைவாசலில் அமைக்கப்படும் நவீன கால்நடை பூங்கா 900 ஏக்கர் நிலப்பரப்பில் 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட இருக்கிறது. எனவே, இந்தப் பூங்கா மிகப்பெரிய அளவில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது.

அவை பின்வருமாறு:

  • முதலாவது பிரிவில், நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம், பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு, இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. இங்கு நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகமும் அமைக்கப்படும்.
  • இரண்டாம் பிரிவில், பால், மீன், முட்டை போன்ற உணவுப்பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்களை தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்படும்.
  • மூன்றாம் பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி, தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மூத்த அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அமையவுள்ள கால்நடை பூங்காவில் எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது பற்றி அலுவலர்கள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். விரையில் அடுத்த கட்ட வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details