இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது, மாவட்டந்தோறும் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நன்றி.
கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் பாதித்துள்ளது. அரசுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே கூடுதலாக கடன் பெற வேண்டியுள்ளது.
மாநிலங்களுக்கான கடன்வரம்பை அதிகரித்துள்ள அதேவேலையில், கடன் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தேவையற்றது. மத்திய, மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து நிலவாத திட்டங்களை தற்போது நிலவும் சூழலைப் பயன்படுத்தி உடனடியாக நிறைவேற்ற நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடைய நடவடிக்கை இல்லை.