தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னணி லாஜிஸ்டிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு! - Special Investment Promotion Task Force

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முன்னணி லாஜிஸ்டிக்ஸ் (Logistics), பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

cm-edappadi-palaniswami
cm-edappadi-palaniswami

By

Published : Jul 13, 2020, 7:40 PM IST

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். அதன்படி முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு, அதற்கு சிறப்பு பணிக்குழு (Special Investment Promotion Task Force) அமைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் காரணமாக பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தன. அண்மையில் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னணி லாஜிஸ்டிக்ஸ் (Logistics) நிறுவன தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, பெடக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் (ம) முதன்மைச் செயல் அலுவலர் பெரட்ரிக் டபிள்யு ஸ்மித், யுபிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டேவிட் பி. அப்னே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சவுதி அரெம்கோ நிறுவனத் தலைவர் அமின் எச். நாசர், எக்ஸன் மொபில் கார்பரேஷன் நிறுவனத் தலைவர் டாரன் வுட்ஸ், சிபிசி கார்ப்பரேஷன் நிறுவனத் தலைவர் ஜியா ருயே ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details