தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் தேவைக்காகத் திறக்கப்படும் நெல்லை மணிமுத்தாறு அணை - மணிமுத்தாறு அணையிலிருந்து 25 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவு

மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் பொருட்டு திருநெல்வேலி மணிமுத்தாறு அணையிலிருந்து 25 நாள்களுக்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

CM  Edappadi Palanisamy Order to open water from Nellai Manimuttaru dam for 25 days
CM Edappadi Palanisamy Order to open water from Nellai Manimuttaru dam for 25 days

By

Published : Feb 2, 2021, 10:08 AM IST

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மணிமுத்தாறு அணையிலிருந்து 25 நாள்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதான கால்வாயின் 4ஆவது ரீச்சில் உள்ள 10ஆவது மடை வழியாக திசையன்விளை ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளிலுள்ள சுவிசேசபுரம் குளம், புதுக்குளம் கல்குளம், நந்தன்குளம், செங்குளம், முதலாளிகுளம், குருவிசுட்டான் குளம், அப்புவிளைகுளம், எருமைகுளம், அவிச்சான்குளம், இலகுளம், கடகுளம் ஆகிய சிறப்பு குளங்களுக்கும் ஆயங்குளம், ஆணைக்குடி படுகைகளுக்கும் விநாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீரை பிப்ரவரி 3ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை 25 நாள்களுக்கு குடிநீர்த் தேவைக்காகத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், திசையன்விளை வட்டங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டம் ஆகிய வட்டங்களில் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details