மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக, அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த தாம்பரம் சண்முக சாலையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாட்டின் உரிமைகளையெல்லாம் மத்திய பாஜக அரசிடம் பறிகொடுத்துவருகிறது. மாநில அரசின் சட்ட திட்டத்தில் வரும் வேளாண் சட்டத்தை ஜனநாயக விதிமுறைகளை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.