தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் ஆலோசனை - தமிழ்நாடு செய்திகள் இன்று

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா: முதலமைச்சர் ஆலோசனை
கரோனா: முதலமைச்சர் ஆலோசனை

By

Published : Apr 18, 2021, 1:42 PM IST

சென்னை:கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கூடுதலாகத் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து பெற்று பொதுமக்களுக்குப் போடுவது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் ஆலோசனையின் அடிப்படையில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details