தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கேப்டன் கூல், பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்' - தோனிக்கு பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து! - திமுக தலைவர் ஸ்டாலின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தோனிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

cm-edappadi-k-palaniswami-dmk-stalin-tweet-on-ms-dhoni
cm-edappadi-k-palaniswami-dmk-stalin-tweet-on-ms-dhoni

By

Published : Aug 16, 2020, 1:32 PM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓய்வுக்கு பின்னான வாழ்க்கைக்காக பல்வேறு தரப்பினரும் தோனிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''331 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். இந்தியாவுக்காக மூன்று சாம்பியன்ஷிப் டிராபிகளையும் வென்றவர் கேப்டன் கூல். அவரின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை சேர்ப்பதாகும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், '' தோனியின் ஓய்வு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையளிக்கும். கிரிக்கெட்டிற்காக உங்களின் பங்களிப்பும், நெருக்கடியான நேரங்களில் உங்களின் தலைமைப் பண்பும் இன்றியமையாதது. உங்களின் அடுத்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துக்கள்'' என முன்னாள் திமுக தலைவர் கலைஞருடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க:அண்ணா அறிவாலயத்தில் முதல் முறையாக தேசியக் கொடி ஏற்றிய மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details