தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவு: முதலமைச்சர் இரங்கல்! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவு

சென்னை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.

cm
cm

By

Published : Sep 7, 2020, 8:08 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அன்பு சகோதரர் நாராயணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி செப்.6ஆம் தேதி அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

நாராயணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் ஈடுசெய்ய முடியாத துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை அமைச்சருக்கும், அவருடைய குடும்பத்திற்கும்
அளிக்கவும், நாராயணனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details