தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: முதலமைச்சர் நிவாரணம் - முதலமைச்சர் நிவாரணம்

சென்னை: விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

cm edappadi
cm edappadi

By

Published : Mar 21, 2020, 1:12 PM IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், சிப்பிப்பாறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவரின் மனைவி இராணி, கணேசன் என்பவரின் மனைவி தாமரைச்செல்வி, முப்பிடாரி என்பவரின் மனைவி தங்கம்மாள், ஜெயக்குமார் என்பவரின் மனைவி ஜெயபாரதி, முத்துகனி என்பவரின் மனைவி பத்திரகாளி, செல்வக்குமார் என்பவரின் மனைவி வேலுத்தாய், முருகையா, ரங்கசாமி நாயக்கர் என்பவரின் மனைவி காளியம்மாள், குருசாமி ஆகிய ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்தத் துயர சம்பவத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க
மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் பட்டாசு தயாரிக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் உரை

காவல் துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் செயல்பட்டு இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details