நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவில் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமியின் சொத்து மதிப்பு ஈபிஎஸ்-ஸின் வீழ்ச்சி:
எடப்பாடி தொகுதியின் வேட்பாளராக களமிறங்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு தற்போது, சுமார் 2 கோடியே 2 லட்சம் ரூபாய் அசையும் சொத்தும் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் அசையா சொத்தும் என மொத்தம் 6 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகள் உள்ளன. 2016 தேர்தலுக்குப் பின் இவரின் சொத்து மதிப்பு 14.13 விழுக்காடாக குறைந்துள்ளது.
ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஓபிஎஸ்ஸின் அசுர வளர்ச்சி:
போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு 2016 தேர்தலுக்குப் பின் 409.25 விழுக்காடாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது 2016இல் சுமார் 55 லட்ச ரூபாயாக இருந்த அசையும் சொத்து மதிப்பு, தற்போது 5 கோடியே 19 லட்ச ரூபாயாகவும் 2016ல் 98 லட்சம் ரூபாயாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு 2 கோடியே 64 லட்ச ரூபாயாகவும் உயர்ந்து தற்போது மொத்தம் 7 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகள் உள்ளன.
கடன் இல்லாத ஸ்டாலின்:
திமுக தலைவரும் கொளத்தூர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலினுக்கு தற்போதைய நிலவரப்படி கடன் எதுவும் இல்லை. 2016 தேர்தலுக்குப் பின் 52.2 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ள அவரிடம், 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய அசையும் சொத்துகளும் 3 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துகளும் என மொத்தம் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு சொத்து மதிப்பை விட கடன்தான் அதிகம்:
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு 9 கோடியே 26 லட்சம் ரூபாய் அசையும் சொத்தும்; 3 கோடியே 1 லட்சம் ரூபாய் அசையா சொத்தும் என 12 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகள் உள்ளன. 2016 தேர்தலுக்குப்பின், இவரின் சொத்து மதிப்பு 13.83 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது கடனாக 85 கோடியே 44 லட்சம் ரூபாய் உள்ளது.
31 லட்சம் ரூபாய்தான் அசையா சொத்து :
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில், போட்டியிடுகிறார். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில், தனக்கு 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2016 தேர்தலுக்குப் பின் 7.46 விழுக்காடு வளர்ச்சியைக் கண்ட இவருக்கு 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்தும் 31 லட்சம் ரூபாய் அசையா சொத்தும் என மொத்தம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகள் உள்ளன.
கமல் ஹாசனின் சொத்து மதிப்பு லீடிங்கில் உள்ள கமல் :
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தற்போதைய நிலவரத்தின்படி 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அசையும் சொத்தும் 131 கோடி 84 லட்சம் ரூபாய் அசையா சொத்தும் என 176 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகள் உள்ளன. தனக்கு 49 கோடியே 50 லட்ச ரூபாய் கடன் உள்ளதாக அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர்களின் கல்வித்தகுதி, கார்கள்