தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் வருகிறது மின்சார பேருந்து ; தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - தமிழ்நாடுஅரசு மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது

சென்னை : தமிழ்நாட்டில் 525 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளதாகவும், இதன்மூலம் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுஅரசு மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது

By

Published : Sep 16, 2019, 4:43 PM IST

பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு அரசு மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். முதல்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் 525 பேருந்துகள் இயக்க உள்ளதாகவும், இதனால் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாடுஅரசு மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் பெப்சி அமைப்பிற்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இதனை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பெற்றுக்கொண்டார்.

பையனூரில் அம்மா அரங்கம் அமைப்பதற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

பெப்சி அமைப்பிற்கு 1கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்

ABOUT THE AUTHOR

...view details