இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
- தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு
- அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்
- பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்படும்
- தனியார் நிறுவனங்கள் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்
- அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை, மருந்துப் பொருள்கள் விற்பனைக்கு எந்த தடையும் கிடையாது
- அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும்
- விடுதியில் தங்கியிருப்பவர்கள் வசதிக்காக அம்மா உணவகம் செயல்படும்.
- கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
- அவரச உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை, அத்தியாவசியப் பொருள் போக்குவரத்துத் தவிர மற்ற அனைத்துக்கும் தடை
- பொதுப் போக்குவரத்து, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் உள்ளிட்டவை இயங்காது
- மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள் போக்குவரத்து தவிர மற்றவற்றுக்குத் தடை
- பால், காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு
- அத்தியாவசியப் பணிகள், அவசர அலுவல்கள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது
- காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகியவை தொடர்ந்து செயல்படும்
- அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்
- அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை
- தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது
- வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்போருக்கு உணவுகள் கிடைக்கும் விதத்தில் உணவகங்கள் செயல்பட அனுமதி
- பிற இடங்களுக்குச் சென்று வந்தவர்கள், கரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
- குடும்ப உறுப்பினர்கள், மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது முக்கியமானது
- வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், உடனடியாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
- தடை உத்தரவால் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் இடையூறை களைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு