தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிப்புக்கு முழுக்கு - அரசியலில் ஆழப்பதியவுள்ள உதயநிதி! - Chennai Chepauk

உதயநிதி ஸ்டாலின் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் முழுவதுமாக இறங்கவுள்ளார் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நடிப்புக்கு முழுக்கு - அரசியலில் ஆழப்பதியவுள்ள உதயநிதி!
நடிப்புக்கு முழுக்கு - அரசியலில் ஆழப்பதியவுள்ள உதயநிதி!

By

Published : May 12, 2022, 3:52 PM IST

சென்னை திரைப்பட நடிகரும் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கெனவே இவரது நடிப்பில் வெளியான ’ஒரு கல் ஒரு கண்ணாடி, மனிதன், நிமிர், சைக்கோ’ போன்ற படங்கள் பரவலாகப் பேசப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தமிழ்த்திரையுலகில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்னும் நிறுவனத்தின் மூலம் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் ‘ஆர்ட்டிக்கள் 15’ என்னும் பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவமான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே பேட்டியில் மாமன்னன் திரைப்படம்தான் அநேகமாக எனது கடைசி படமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், உதயநிதியின் கவனம் முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே செல்ல வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:பாலய்யா vs ஆண்டவர் : தெலுங்கு பாடலை நினைவூட்டுகிறதா 'பத்தல' பாடல்

ABOUT THE AUTHOR

...view details