தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விசாரணை முடியும் வரை மூடிய மதுக்கடைகள் திறக்கப்படாது' - புதுச்சேரி அரசு உறுதி - புதுச்சேரி அரசு

சென்னை: ஊரடங்கின்போது, மதுபானங்களை விற்ற 100 மதுபான கடைகளை விசாரணை முடியும்வரை திறக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

court
court

By

Published : May 21, 2020, 4:43 PM IST

ஊரடங்கின் போது புதுவையில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த கடைகளை மீண்டும் திறப்பதற்கு தடை விதிக்கக்கோரி, பாமக சார்பாக காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கலால் துறை 100 மதுபான கடைகளின் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை மதுபான கடைகளை திறக்க மாட்டோம் என்று உறுதியளித்தது. இதை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்படும்'-அமைச்சர் நமச்சிவாயம்

ABOUT THE AUTHOR

...view details