தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது - சென்னை

சென்னை: ஆவடி அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

பிராத்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மதபோதகர் கைது
பிராத்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மதபோதகர் கைது

By

Published : Apr 19, 2021, 6:56 PM IST

ஆவடி அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்தவ மத போதகரான இவர், இதே பகுதி திருமலை நகரில் கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார். இதற்கிடையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கும், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது உடைய பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். மேலும், அவர் பெண்ணிடம் எங்களது ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டம் தீரும் என கூறி உள்ளார். இதனையடுத்து, கடந்த 17ஆம் தேதி அப்பெண் திருமலை நகரில் உள்ள ஆலயத்திற்கு தனியாக சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு இருந்த ஸ்காட் டேவிட், அவரை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சத்தம் போட்டு அலறியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, மத போதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்தனர். பின்னர், காவல்துறையினர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details