தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: மாதவரம் பகுதியில் துப்புரவு பணியாளர் அலுவலகம் முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

cleaning staff suicide
தூக்கிட்டு தற்கொலை

By

Published : Dec 18, 2019, 6:59 AM IST

சென்னை மாதவரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தவர் டானியல்(43). இவர் துப்புரவு பணியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த டானியல் மது அருந்தியிருந்த காரணத்தினால் பணி செய்ய வேண்டாம் என்றும் நாளை மது அருந்தாமல் பணிக்கு வருமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனை ஏற்க மறுத்த டானியல், அனைவரும் பணிக்குச் சென்ற பிறகு, அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை இரும்பிலிருந்த கேபிள் ஒயர் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உயிருக்குப் போராடிய டானியலை அரசு சுகாதார நல மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சோதனை செய்த மருத்துவர்கள், டானியல் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

துப்புரவு பணியாளர் அலுவலகம் முன்பு தூக்கிட்டு தற்கொலை

இச்சம்பவத்திற்கு குடும்பத்தகராறு அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், டானியல் உடலை உடற்கூறாய்வுக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details