தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊதிய உயர்வு வேண்டும்: துப்புரவு பணியளார்கள் மனுத்தாக்கல் - high court of madras

சென்னை: காவல் துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வுகேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court of madras

By

Published : Aug 10, 2019, 6:38 PM IST

கடந்த 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். பின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த 2012ஆம் ஆண்டு காவல் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் 3000 ரூபாய் ஊதியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

காவல் துறையில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் 2018ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கல்வித் துறையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றிவர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 21,500 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம்

மாதம் 5,730 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறும் தங்களுக்கு, கல்வித் துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி காவல் துறையில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் சசிகலா உள்ளிட்ட 30 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஊதிய உயர்வு வழங்கும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கல்வித் துறைக்கு மட்டுமே பொருந்தும் எனக்கூறி, ஊதிய உயர்வு கோரிய மனுவை காவல் துறை நிராகரித்தது பாரபட்சமானது என மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒரே பணி ஒரே ஊதியம் என்ற அடிப்படையில் கல்வித் துறை துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட்14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details