விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "உலக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், பல்வேறு இடங்களில் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் வாகன நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை.
மாமல்லபுரத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர உத்தரவு - மாமல்லபுரம் செய்திகள்
சென்னை: சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு வாரத்தில் ஏற்படுத்தி தர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், அடிக்கடி வாகன திருட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி அமர்வு, மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான உரிய வசதிகள் செய்து தரப்படாததற்கான காரணங்கள் என்ன? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரரின் புகார் குறித்து ஆறு வாரத்திற்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.