சென்னை:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 2021-2022ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளான பி.ஏ. எல்.எல்.பி. (BA LLB), பி.காம். எல்.எல்.பி. (B.com LLB), பி.பி.ஏ. எல்.எல்.பி. (BBA LLB), பி.சி.ஏ. எல்.எல்.பி. (BCA LLB) முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக விழா பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக வளாகக் கலையரங்கில் இன்று (செப். 29) நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்றநீதிபதி கிருபாகரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஒழுக்கம், கற்றல், கடமையிலிருந்து தவறாமல் இருத்தல், பெரியோர் - ஆசிரியர்களுக்கு பணிதல், வாழ்க்கையில் தர்மத்தை குறிக்கோளாக வைத்திருத்தல் வேண்டும்.
சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தையும், சட்டம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் எதிர்காலச் சவால்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, இத்துறையைத் தேர்வுசெய்துள்ள தாங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.