தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: நாளை ஆன்லைனில் கருத்துக் கேட்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நாளை ஆன்லைன் மூலம் கருத்துக் கேட்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

By

Published : Jun 2, 2021, 6:39 PM IST

Updated : Jun 3, 2021, 9:36 AM IST

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், "மே மாதத்தில் நடத்தப்படவிருந்த2020-21ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வரும் 7ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை ஆன்லைன் மூலம் 3ஆம் தேதி கேட்க வேண்டும்.

அந்த அறிக்கையை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பிட தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் தலைமை ஆசிரியர்கள் மூலமாக அவர்களது பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அதன் விவரத்தினையும் தொகுத்து அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jun 3, 2021, 9:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details