சென்னை:அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் இன்று(ஜன.30) முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேல்நிலை மாணவர்கள் ஆயிரம் ரூபாயும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாயும் சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும்.