சென்னை:கல்லூரியில் இருந்து வழக்கம் போல் மாணவர்களும், ஆசிரியர்களும் பேருந்துக்குள் ஏறி செல்லும்போது மாணவி அருகில் ஆசிரியை ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த மாணவி நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியை இந்த கல்லூரியின் ஆசிரியர் என தெரிவித்திருக்கிறார்.
ஆசிரியை என்றால் கழுத்தில் ஐடி கார்டு அணியும் படி மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். நான் எதற்கு அணிய வேண்டும் என ஆசிரியை அந்த மாணவியிடம் கேட்டதற்கு, எங்களை மட்டும் அணிய சொல்கிறீர்கள், நீங்கள் யார் என்று எங்களுக்கு எப்படி தெரியும் என கூறியுள்ளார்.
இதனால், இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, வாடி போடி என இருவரும் பேசிக் கொள்ளவே அந்த ஆசிரியை மாணவியை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அந்த மாணவியும் பதிலுக்கு அடிக்க முற்பட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் எந்த விதமான புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவி; உடந்தையாக இருந்த வாலிபர் கைது