சென்னை:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கையின்போது 47ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் சாய் கணேஷ், 31 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதே வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.கே. பாலாஜி, அவரது ஆதரவாளர்கள் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இருப்பதால் வெற்றி அறிவிப்பை நிறுத்திவைக்குமாறும், தேர்தல் அலுவலரான இளங்கோவிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.