தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கையும் களவுமாக சிக்கிய மாநகராட்சி அலுவலர்... கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை! - லஞ்ச ஒழிப்பு காவல்துறை

சென்னை: ஆவடி மாநகராட்சியில் வீட்டு மனைப்பிரிவிற்கு லஞ்சம் வாங்கிய நகர அமைப்பு ஆய்வாளரை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

city-municipal-officer-vigilance-arrest
city-municipal-officer-vigilance-arrest

By

Published : Feb 8, 2020, 5:01 PM IST

சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்காடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை வீட்டுமனை அங்கீகாரம் பெற ஆவடி மாநகராட்சியை அனுகியுள்ளார். இதற்கு ஆவடி மாநகராட்சி மாநகர அமைப்பு ஆய்வாளர் காமத்துரை வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க ரூ. 6 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரமேஷ் புகார் அளித்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி, ஒரு லட்சம் முன் பணம் தருவதாகக் கூறி ரமேஷ் ஆய்வாளர் காமதுரையை ஹுந்து கல்லூரி அருகே வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த காமத்துரையிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரமேஷ் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காமதுரையை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் தொடர்ந்து காமதுரையை ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காமதுரை வேறு எங்கெல்லாம் லஞ்சம் வாங்கியுள்ளார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தும் - இந்திய அணியின் கேப்டன்

ABOUT THE AUTHOR

...view details