தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (பிப்.25) முதல் தொடங்கியது. இது தொடர்பாக சென்னையில் போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், "இந்த வேலை நிறுத்தத்தை ஓராண்டுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வந்தோம். தற்போது வேறு வழியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 18 மாதங்களாக ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் தான் போராட்டம் நடத்தும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.