சென்னை மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் 3.38 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தனர்.
குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள் - மாஃபா பாண்டியராஜன்
சென்னை: பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் விரைவில் ஆவடி மாநகராட்சியோடு இணைக்கப்படும் என ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.
ministers clean the road
இதன் பின்னர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடையாளம்பட்டு ஊராட்சியில் மாஸ் க்ளீனிங் திட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து சாலைகளை சுத்தம் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெஞ்சமின், பூவிருந்தவல்லி, திருவேற்காடு போன்ற நகராட்சிகளையும், அயப்பாக்கம், அடையாளம்பட்டு, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.