தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி' - DMK All Party Meeting

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது.

citizenship
citizenship

By

Published : Dec 18, 2019, 12:25 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது.

இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது வரும் 23ஆம் தேதி, சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

நாடு முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு ஆர்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: 'இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையே காரணம்' - கார்த்தி சிதம்பர
ம்

ABOUT THE AUTHOR

...view details