சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று (நவ.24) டெர்மினல் 4 பகுதியில் திடீரென 30க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்து, வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.
இதில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அதிநவீன வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகள், ரோபோக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும், விமான நிலையத்தின் உள்பகுதி மற்றும் பயணிகள் காத்திருக்கும் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திடீரென அதிரடியாக இந்த சோதனை நடத்தப்பட்டதால், விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பதட்டம் அடைந்தனர். சென்னை விமான நிலையத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எப்போழுதும் தீவிரமாக கண்காணிப்பிலும், விமான நிலைய பாதுகாப்புக்காக தங்கள் வசம் வைத்திருக்கும் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள், விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த ஒத்திகை நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.