சென்னை மாதவரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை காவல் உதவிஆய்வாளர் ஒருவர் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்துள்ளார். இந்தச் செயல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் ஆண்டலின் ரமேஷ். நேற்று (நவ. 27) மாதவரம் ரவுண்டானா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரவி, தன்னுடைய செல்போனை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கூச்சலிட்டார். அப்போது அவ்வழியாக பணியை முடித்துவிட்டுச் சென்ற ஆண்டலின் ரமேஷ் உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் செல்போனை பறித்துச்சென்ற திருடர்களைத் துரத்திச் சென்றார்.
மாத்தூர் சாஸ்திரி இடத்தில் மிக அருகே சென்று இருவரில் ஒருவரைப் பிடிக்கும்போது, பின்னால் இருந்த நபர் தப்பி ஓடினார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் தப்பிச் செல்லும்போது அவரை கீழே இழுத்து உதவி ஆய்வாளரும் கீழே விழுந்து அந்தத் திருடனை பிடித்தார்.
இந்த சிசிடிவி காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்த சென்னை மாநகர காவல் ஆணையர், நீங்கள் பார்ப்பது சினிமா அல்ல, உண்மையில் நடந்தது. இவர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் ஆண்டலின் ரமேஷை நேரில் அழைத்து பாராட்டினார்.
பின்னர் உதவி ஆய்வாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விசாரணையில் அவர் பெயர் அருண் ராஜ் எனத் தெரியவந்தது. அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய கூட்டாளிகள் கல்லூரி மாணவரான நவீன்குமார், விக்னேஷ் என்று இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் 24ஆம் தேதிமுதல் மாதவரத்தில் விடுதி அறை எடுத்து தங்கி கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
போக்குவரத்து காவலர்கள் கதிரவன், ராமமூர்த்தி கடந்த 25ஆம் தேதி கீழ்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு அந்த வாகனத்தை வைத்து நேற்று வடக்கு கடற்கரை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் செல்போனை பறித்துவிட்டு மாதவரத்தில் ரவி என்பவரின் செல்போனை பறித்து தப்பியோடியபோது சிக்கியது தெரியவந்தது. 24ஆம் தேதி முதல் கொள்ளையடித்த 11 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தோம்" எனத் தெரிவித்தார்.
திருடர்களை மடக்கிப் பிடித்த காவல் உதவிஆய்வாளர் அதேபோன்று நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் தேங்கிக் கிடந்த மழைநீரை பணியிலிருந்த போக்குவரத்து தலைமை காவலரான கதிரவன், ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து கைகள் மூலம் அடைப்பை எடுத்து சீர்செய்தனர்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் பலரும் காவலர்களை வெகுவாகப் பாராட்டினர். இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி பாராட்டை பெற்றதால் இன்று காவல் ஆணையர் நேரில் அழைத்து இருவரையும் பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
இதையும் படிங்க:டிசம்பரில் 2,000 மினி கிளினிக் தொடக்கம்! - முதலமைச்சர் அறிவிப்பு!