சென்னை சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (62). இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம். சென்ற 15 ஆண்டுகளாக சந்திரன் சென்னையில் தங்கி சினிமாவில் புரொடக்ஷன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று (அக். 12) இரவு சந்திரன் வீட்டு சமையலறையில் திடீரென கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சந்திரனுக்கு 60 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.