தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளி, சின்னத்துரைக்கு விருதுகள் வழங்க நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படம் மற்றும் சின்னத்திரைக்கு வழங்கப்படாமல் உள்ள விருதுகளை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cine-and-television-award-will-given-to-take-action
10ஆண்டுகள் வழங்கப்படாத வெள்ளி, சின்னத்துரைக்கு விருதுகள்

By

Published : Sep 7, 2021, 8:45 AM IST

சென்னை:சட்டப்பேரவையில், நேற்று(செப் 6) செய்தி மற்றும் விளம்பரத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக அத்துறையின் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாடு அரசால் 1968ஆம் ஆண்டு முதல் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் சின்னத்துரைக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. இவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு, எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விடுபட்ட ஆண்டுகளுக்கும் சிறந்த குறும்படங்களை தெரிவு செய்து விருதுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திரைப்பட படப்பிடிப்பு அனுமதி இணைய வழியாக வழங்குவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் அரசு பொருட்காட்சிகள் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கரோனா தாக்கம் முடிவுற்ற பின்பு, அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப அனைத்து பொருட்காட்சிகள் சிறப்பான முறையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இகதையும் படிங்க:1.86 கோடியா? 186 கோடியா ? - குழம்பிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details