தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 ஆண்டுகால பணிகள் விரைவில் நிறைவு! பயன்பாட்டுக்கு வருகிறது ராதா நகர் சுரங்கப்பாதை? - சுரங்கப்பாதை

குரோம்பேட்டை ராதா நகரில் 12 ஆண்டுகளாக நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகள் வரும் 'மே' மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 9, 2023, 10:58 PM IST

ராதாநகர் சுரங்கப்பாதை பணிகள் முடிவு

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையையும், ராதா நகர் பிரதான சாலையையும் இணைக்கும் வகையில் ஒரே வழியாக குரோம்பேட்டை ரயில்வே கேட் அமைந்துள்ளது. ராதா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் ஜிஎஸ்டி சாலைக்கு வருவதற்கும், அதேபோல் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ராதா நகர் செல்பவர்களுக்கும் இந்த ஒரு ரயில்வே கேட்டை மட்டுமே பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டு ரயில்வே கேட்டை கடந்து சென்று கொண்டுயிருக்கின்றனர்.அந்த வேலையில் ரயில்கள் வருவதால் கேட் மூடப்படும்போது பெரியளவில் நெரிசல்கள் ஏற்பட்டு வந்தது. அதேபோல் மணி கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாலும் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படு வந்தது.

மேலும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது பல பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். கடந்த காலகட்டத்தில் ஆண்டுதோறும் 40 பேர் குரோம்பேட்டை ராதா நகர் தண்டவாளத்தை கடக்க முன்று ரயில் மிதி உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களும்,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து ஜி.எஸ்.டி சாலையையும், ராதா நகர் சாலையும் இணைக்கும் வகையில் ரயில் தண்டவாளத்திற்க்கு அடையில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கட்டி தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ரயில்வே துறையுடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ராதா நகரில் இருந்து ஜிஎஸ்டி சாலை இணைக்கும் வகையில் 17 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டனர். அதன் பிறகு ரயில்வே துறை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்டவாளத்தில் அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை முதல் பணியாக செய்து முடித்து விட்டது. ஆனால் அதன் பிறகு நெடுஞ்சாலை துறை தனது பணியை தொடங்கவே இல்லை இதற்கு காரணம் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க நிலம் கையகப்படுத்த முடியாமல் தினறியினர்.

அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததால் இத்திட்டம் சுமார் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய நிதியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு வழங்கியனர்.அதன் பின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டது. வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ராதா நகர் சுரங்கப்பாதையை மீண்டும் தொடங்க வேண்டும் என குடியிருப்பு சங்கத்தினரும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அத்தொகுதியில் எம்எல்ஏ சட்டமன்றத்தில் பேசி மீண்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆனால் அதனைத் தொடர்ந்து கரோனா காலகட்டத்தில் பணிகள் முடங்கின அதன் பின்பு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு ஜிஎஸ்டி சாலையின் அருகில் மிகப்பெரிய மின்சார கேபிள் செல்வதால் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன இன்னும் எப்போதுதான் இது முடிவடைந்த பொதுமக்கள் நிம்மதியாக பயணிக்க பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், "பல ஆண்டுகளாக ஜிஎஸ்டி சாலையிலிருந்தும், ராதா நகர் பகுதியில் இருந்தும் தண்டவாளத்தை கடக்கும் பொழுது ஏராளமானோர் ரயில் மோதி உயிரிழந்து உள்ளனர். இதில் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் விபத்தில் சிக்கி உயிர் இருந்து உள்ளனர். இதன் பின்பு தான் அப்பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து ராதா நகரை இணைக்கும் வகையில் சுரங்க பாதை அமைக்க பல தரப்பினரும் கோரிக்கை வைத்தோம்.

அதன் பின்பு நெடுஞ்சாலைத்துறையினர் நிலம் கையகப்படுத்துவதினால் 12 ஆண்டுகள் காலதாமதம் ஆகி இன்று வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் கோரிக்கை வைத்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதன் பிறகு தொகுதி எம்எல்ஏ மீண்டும் சட்டமன்றத்தில் பேசி இதற்கான பணிகள் துவங்கப்பட்டது ஆனால் ஒன்றரை இரண்டுகளாகியும் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

17 கோடியில் துவங்கப்பட்ட திட்டம் தற்போது 24 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது இதற்கு காலதாமதமே முக்கிய காரணம். தற்போது ராதா நகரில் இருந்து குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளம் வரை பணிகள் முடிந்துள்ளனதற்போது ரயில்வே துறையினர் இடம் ஒதுக்காததால் பணிகள் தாமதமாக நடக்கிறது.விரைவாக பணிகள் முடிக்க வேண்டும். மேலும் ஜிஎஸ்டி சாலையின் அடியில் அதிகப்படியான மின்சார கேபில்கள் செல்வதால் அதனை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் பணிகள் மேற்கொள்வதால் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம்" என தெரிவித்தார்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “ராதா நகரையும், ஜி.எஸ்.டி சாலையும் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகள் 65 விழுக்காடு முடிவடைந்துள்ளது.ஒரு பகுதி முழுவதுமாக பணிகள் முடிவடைந்துவிட்டன தொடர்ந்து ஜி.எஸ்.டி சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளில் தாமத ஏதும் இல்லாமல் விரைவாக முடிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ரயில்வே துறை ஜிஎஸ்டி சாலையில் இருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்தை இணைக்கும் எக்ஸ்லேடர் கருவியை அகற்றிவிட்டு மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் அதற்காக ரயில்வே துறையிலும் இடத்தை கோரியுள்ளோம். தற்போது வாய்மொழியாக நிலத்தை ரயில்வே துறையினர் கொடுத்துள்ளனர்.ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் கொடுக்கவில்லை அதனை அப்புறப்படுத்யிய பிறகு 35 விழுக்காடு பணிகள் விரைவாக தொடங்கி நடைபெற உள்ளது.

ராதா நகர் சுரங்கப்பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்த தொடரப்பட்ட வழக்குகள் கடந்த 2018,2019 ஆம் ஆண்டுகளில் முடித்து வைக்கப்பட்டது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட பின் கரோனா காலகட்டத்தில் முடங்கின. தற்போது ராதார நகர் சுரங்கப்பாதை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இன்னும் பத்து நாட்களில் ரயில்வே துறையிடம் அதிகாரபூர்வ செய்தி வந்ததும் அந்த பணிகள் விரிவாக நடைபெறும்.

தலைமைச் செயலாளர் இறையன்பு நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வரும் மே மாதத்திற்குள் பணிகளை முடித்து விட உத்தரவிட்டு உள்ளார். இதனால் பணிகள் விரைவாக செய்யப்படுகிறது தாமதமாகாமல் விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாடுக்கு கொண்டுவரப்படும்.பாலத்தின் அகலம் 5 மீட்டர் அளவிலும் மூன்றரை மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதை வழியாக கார், இருசக்கர வாகனம், இலக்கணங்கள் செல்லும் வகையிலும்,இரு பக்கங்களிலும் பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தும் வகையிலும் அடிமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

வரும் மே மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ராதா நகர் பகுதி பொது மக்களும், குடியிருப்போர் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் நம்மிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ரூ.312.37 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

ABOUT THE AUTHOR

...view details