சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச. 25) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.