சென்னை:சென்னை விமான நிலையத்தில் முக்கிய பண்டிகைகள் விமானப் பயணிகளுடன் இணைந்து ஊழியர்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கரோனா தொற்று காரணமாக, பயணிகளுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகளை தவிர்த்து, அங்கு பணிப்புரியும் பராமரிப்பு பணியாளர்கள், ஊழியர்கள் இணைந்து இன்று கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையினைக் கொண்டாடினர். மேலும் கூட்டுப் பிரார்த்தனை செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இந்த கொண்டாட்டத்தையொட்டி, இயேசு கிறிஸ்து பிறந்த நிகழ்வை காட்சிப்படுத்தும் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம், வண்ண விளக்குகள் ஆகியனவற்றைக் கொண்டு விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.