தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜமௌலிக்கு நன்றி - நடன இயக்குநர் லலிதா ஷோபி! - ராஜமௌலிக்கு லலிதா ஷோபி நன்றி

மரியாதை ராமண்ணா படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ராஜமவுலிக்கு நடன இயக்குநர் லலிதா ஷோபி நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜமௌலிக்கு நன்றி
ராஜமௌலிக்கு நன்றி

By

Published : Dec 14, 2021, 8:22 AM IST

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிப் படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குநர் லலிதா ஷோபி. இவர் கமல்ஹாசன், விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என்டிஆர், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்தாண்டு இவர் நடன இயக்குநராக பணியாற்றிய `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. மறைந்த நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்காக நடன இயக்குநர் லலிதா ஷோபிக்கு வழங்கப்பட்டது.

ராஜமௌலிக்கு நன்றி

இந்நிலையில் லலிதா ஷோபி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உங்களை விருதுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களிடம் இதனைப் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருந்தேன். இப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளோம். இந்த விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநர் ஷானவாஸுக்கு நன்றி. இன்று அவர் இல்லை. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். எனது கணவர் ஷோபிக்கும் இந்த விருதை பெற்றதில் மகிழ்ச்சி. ஜூரிக்கு நன்றி.

நடிகர் விஜய் வாழ்த்து

இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. வித்தியாசமான படம். யார் மனதும் புண்படாதபடி பாடல்கள் இருந்தன. ஒட்டுமொத்த படக்குழுவினரின் உதவிதான் எனக்கு இவ்விருதைப் பெற்றுக்கொடுத்துள்ளது. மரியாதை ராமண்ணா படத்தில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்
ராஜமவுலிக்கு நன்றி. நடிகர் விஜய் என்னை அழைத்து வாழ்த்தினார். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறேன். இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் பணியாற்றியுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க:நடிகைகள் கரீனா கபூருக்கும் அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details