சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் உள்பட நான்கு காவலர்களுக்கு கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனாவை வென்ற காவலர்கள்: வரவேற்பளித்த மக்கள் - Choolaimedu policemen recovered from corona welcomed by people
சென்னை: சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்த நான்கு காவலர்கள் கரோனா நோயிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பியபோது பொதுமக்கள், காவலர்கள் சிவப்பு கம்பள வரவேற்பளித்தனர்.

Choolaimedu policemen recovered from corona welcomed by people
இதனால் சூளைமேடு காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். இந்த நிலையில் இன்று 30 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு காவலர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் நான்கு காவலர்களுக்கும் துணை ஆணையர் தர்மராஜ், பொதுமக்கள் இணைந்து பூங்கொத்து கொடுத்து, சிவப்பு கம்பள வரவேற்பளித்து பழக்கூடை வழங்கி வரவேற்றனர்.
இதையும் படிங்க... கோவிட்-19லிருந்து மீண்டு வீடு திரும்பிய காவலருக்கு உற்சாக வரவேற்பு!