மதுரவாயல், கிருஷ்ணா நகர், 14வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (46). இவர் கோயம்பேடு சந்தையில் சொந்தமாக சாக்லேட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த சகோதரரின் மகள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
வியாபாரியின் வீட்டிலிருந்து 14 சவரன் கொள்ளை பின்னர், இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து, மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
இதில், வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 14 பவுன் தங்க நகைகள், வீட்டிலிருந்த இரண்டு டிவிக்கள், இரண்டு கேமராக்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஏதேனும் சந்தேகத்திற்குறிய நபர்களின் நடமாட்டம் பாதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து, கொள்ளையர்களை தீவரமாக தேடிவருகின்றனர்.