தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னணி நாயகர்களுக்கு கதை தேர்வு முக்கியம் - இயக்குநர் பேரரசு - சென்னை மாவட்ட செய்திகள்

முன்னணி நாயகர்களுக்கு கதை தேர்வு முக்கியம் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பேரரசு பேட்டி
இயக்குநர் பேரரசு பேட்டி

By

Published : Dec 21, 2022, 8:10 AM IST

இயக்குநர் பேரரசு பேட்டி

சென்னை: ரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ள அவள் அப்படித்தான் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.20) நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, பொன்வண்ணன், லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் லிங்குசாமி, அவள் அப்படித்தான் திரைப்படம் இந்திய சினிமாவின் மிக சிறந்த படம். பத்து நாட்களில் ஒரு படத்தை இயக்கியது பாராட்டப்பட வேண்டியது என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, பெண் அடிமை, ஆணாதிக்கம் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டது. இப்போது எல்லோரும் சரிசமம்தான். ஏதோ கொஞ்சம் இருக்கலாம். மற்றபடி இருவரும் சரிசமம் தான். தற்போதைய சூழலில் 90 சதவீத குடும்பங்கள் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒரு அமைச்சரின் பெயர் கூட தெரியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பெயர் தெரிய ஆரம்பித்தது. எடப்பாடி பழனிசாமி பெயர் தெரிய தொடங்குவதற்குள் முதலமைச்சர் ஆகிவிட்டார் என கூறினார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எத்தனையோ பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். மாதர் சங்கம் எதுவும் செய்யவில்லை. ஆனால் சினிமாவில் எது நடந்தாலும் மாதர் சங்கம் கொந்தளிக்கிறது. மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களை நடுரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, தற்போதைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது பெண்களுக்கு விடுதலையாக உள்ளது. கணவன் சரியில்லை என்றால் யாரும் பொறுத்துக்கொண்டு வாழ்வதில்லை என்றார்.

தன்னை பொறுத்தவரை அஜித், விஜய் இருவரும் சமம்தான். இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும். வாரிசு, துணிவு இரண்டில் எது பெரிய வெற்றியடைகிறதோ அந்தப்படம் தான் நம்பர் 1. ஹீரோக்கள் கிடையாது. கதாநாயகர்கள் யாரும் அதிக சம்பளம் கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் தான் கொடுக்கிறார்கள் என கூறினார்.

இதில் ஹீரோக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. தற்போது ஹீரோக்கள் கையில் படம் சென்றுவிட்டது. எனவே நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். காவி என்பது ஒரு வண்ணம் அவ்வளவு தான் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.5.35 கோடி மதிப்புடைய 2.2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details