சென்னை:கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்திருக்கும் படம், இன்னும் பெயரிடப்படாமல் 'சியான் 60' என சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதில் விக்ரம் கேங்ஸ்டராகவும், துருவ் விக்ரம் காவல் துறை அலுவலராகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு நேற்றுடன் (ஆக.14) முடிந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்தது.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.