அமெரிக்கா:மண் மணக்கும் தமிழ் கிராமிய பாடல்களை அறிந்திராத இளைய சமுதாயத்தினர் தமிழ் கிராமிய பாடல்களை அடுத்த சந்ததியருக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்க சான் அன்டோனியோ வில் கும்மி பாடல்களுடன் சித்திரைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சான்ஆன்டோனியோ இந்து கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உறியடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இனிமையான கும்மி பாடல்களை அனைத்து வயதினர் பாடி சித்திரை விழா கொண்டாடினர். அதே போல் சான் ஆன்டனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.