சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் விசேஷ பூஜைகள், பால்குட ஊர்வலங்கள், தீமிதி திருவிழாக்கள் என சிறப்பு வழிபாடுகள் நடைப்பெற்று வருகிறது.
அரிசி பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட வடிவுடை அம்மன்
சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரிசி, பழங்கள், காய்கறிகளால் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் சன்னதி அலங்காரம் செய்யப்பட்டது.
வடிவுடை அம்மன்
இந்நிலையில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைப்பெற்றது. இதில் அரிசி, முட்டை, இளநீர், வாழைப்பழம், முருங்கை, கத்தரிக்காய், பலாப்பழம் போன்ற பொருட்களால் மூலவர் சன்னதி அலங்கரிக்கப்பட்டது.
சித்ரா பவுர்ணமி என்பதால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.