சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதி வந்தடைந்தார் ஜி ஜின்பிங்! - PM Modi Xi Jinping Summit
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் தற்போது கிண்டியிலுள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதி வந்தடைந்தார்.
Chinese President Xi Jinping
அங்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் சீன அதிபரை வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, அவர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்துள்ளார்.
சோழா நட்சத்திர விடுதியில் மதிய உணவு எடுத்துக்கொள்ளும் அவர், சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்துவிட்டு பின்னர் மாமல்லபுரம் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.