தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - இருவர் கைது - two persons arrested

சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம்
சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம்

By

Published : Jul 6, 2021, 10:43 AM IST

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வலைதளங்களில் உள்ள ஆபாச பதிவுகளை கண்காணித்து வரும் நிலையில், இரு இளைஞர்கள் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையினருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா பெரவள்ளுர் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வியாசர்பாடிச் சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரும் வ.உ.சி நகர் பகுதியில் வசிக்கும் 18 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் இணையத்தில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று (ஜூலை 5)ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 150 மாணவர்கள் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details