தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 16, 2019, 11:33 PM IST

ETV Bharat / state

குழந்தைகளின் ஆபாச காணொலி - சென்னையில் சிபிஐ சோதனை

சென்னை: குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

child abuse

ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இந்த ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பலரும் பரப்பிவருவதாக சிபிஐக்கு ஜெர்மனி தூதரகம் அனுப்பியது. இதனடிப்படையில் சிபிஐ அலுவலர்கள் நடத்திய விசாரணையில் 483 பேர்களில் ஏழு பேர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆபாச காணொலிகளை இந்த ஏழு பேரின் மொபைல் மூலம் பரப்பியது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலர்கள், நேற்று நாடு முழுவதும் ஆறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணா, தாம்பரம் சேலையூர் பகுதியைச் சேர்ந்த கோஷிமா ஆகியோரின் வீடுகளில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details