பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் கண்ணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார்(30), கட்டுமானப் பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவர், நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் போடவே, அதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.
அதைக்கண்ட சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். அப்போது, சாலையில் கிடந்த கல் தடுக்கி கீழே விழ, பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர், சதீஷ்குமாரை மீட்டு பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சையளித்தனர்.